இன்றைய ராசிப் பலன்கள் 26.11.2014

astrology2மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

ரிஷபம்: மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். மாலையிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.

மிதுனம்: சகோதரங்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாண பேச்சு வார்த்தைசாதகமாக முடியும். தாயார் ஆதரித்து பேசுவார்.புதியவர்களின் நட்பால் உற்சாக மடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மாலை 5 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பிரபலங்கள் அறிமுகமா வார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.

சிம்மம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்ட றிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறை வேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.

கன்னி: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் சலுகை களை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவுக் கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடு வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

தனுசு: மாலை 5 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மகரம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வெளிவட்டாரத்தில் அலைச் சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். மாலை 5 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகார பதவியில் இருப்ப வர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். சிறப்பான நாள்.

மீனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். சகோதரங்கள் பாசமாக நடந்துக்கொள்வார்கள். விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.

Tags: 

Leave a Reply