யாழ்.பல்கலைக்கழகம் இன்று முதல் திடீர் அறிவிப்புடன் இழுத்து மூடப்பட்டுள்ளது!

yarl-uniயாழ்.பல்கலைக்கழகம் இன்று முதல் திடீர் அறிவிப்புடன் இழுத்து மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது மிகவும் மோசமாகக்குறைவடைந்துள்ளதாக தெரிவித்து இன்று முதல் எதிர்வரும் 1ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி விடுதிகளில் உள்ள மாணவர்களையும் இன்று மாலைக்குள் வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் யாழ்.பல்கலைக்கழக சூழலினை சுற்றி இராணுவத்தினர் கவச வாகனங்களுடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒருவாரமாக பல்கலைக்கழக சூழலில ;இராணுவத்தினரும், பொலிஸாரும் நிலை கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று இரவு முதல் அதிகளவு இராணுவத்தினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டதுடன் இரண்டு கவச வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags: ,

Leave a Reply