வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாவீரர் தின நிகழ்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாவீரர் தின நிகழ்வுகளை தடுக்கும் நோக்கில் பாரியளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீதிச் சோதனைசாவடிகள், வீதித் தடைகள் ஊடாகவும், ரோந்துப் பணிகளின் ஊடாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு கடமைகளுக்காக விசேட அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளைய தினம் நடைபெறவுள்ள விசேட பூஜை வழிபாடுகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறு கோயில் நிர்வாகத்தினருக்கு படையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டிலும் இவ்வாறான ஓர் தடை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தை அண்டிய பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
















