இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தோற்கடிப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கம் எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ராஜபக்ஸவின் ஆட்சியில் இலங்கைத் தமிழர்களுக்கான நீதி தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட சம்பவத்தை அரசியலாக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
















