லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிறுவனர்கள் திரு. அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் அவரது தாயார் திருமதி.ஞானாம்பிகை அல்லி ராஜா ஆகியோரின் மேற்பார்வையில் கல்வி உதவி தேவைப்படும் பாடசாலை செல்லும் சிறுவர்களுக்கு வழங்கும் திட்டமே மாணவர் மானிய உதவித்தொகை திட்டமாகும். இந்தத் திட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 10,000 மாணவர்கள் பயன் பெறுவர்.
இரண்டாவது கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 2400 மாணவர்களில் ஒவ்வொரு மாணவருக்கும் மாதாந்தம் ரூபாய் 1000 அவர்களின் கல்விக்கான உதவியாக வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் உயர்வதோடு அவர்களின் பாடசாலை இடைவிலகல் தன்மை குறைந்து வருகை அதிகரித்துள்ளது.
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கிளைகள் இந்த வாரம் மாணவர் சேமிப்பு கணக்கு புத்தகங்கங்களை விநியோகித்துள்ளது. அத்துடன் ஏனைய கிளைகள் சேமிப்புக் கணக்கு புத்தகங்கங்களை வழங்கவுள்ளன.




















