மேஷம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் தலைமை யின் ஆதரவு கிட்டும். சாதிக்கும் நாள்.
ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். நீண்ட நாளாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைகள் நீங்கும் நாள்
மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் டென்ஷனாவீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.
கடகம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். கல்யாண பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.
சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார் கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
கன்னி: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியா பாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவு வார்கள். கனவு நனவாகும் நாள்.
துலாம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருடன் மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். எதிர்பார்ப்பு கள் பூர்த்தியாகும் நாள்.
விருச்சிகம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.
தனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக் கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிம்மதியான நாள்.
மகரம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன்& மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
கும்பம்
கும்பம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறி யில் போய் முடியும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங் கள். நண்பர்கள் சிலர் உங்களை உதா சீனப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர் களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.
மீனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பெற் றோரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத் தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர் கள். உத்யோகத்தில் புது பொறுப் புகள் தேடி வரும். சிறப்பான நாள்.
















