தமிழக மீனவர்களின் படகுகள் விரைவில் விடுவிக்கப்படலாம்!- சுப்பிரமணியன் சுவாமி

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் விரைவில் விடுவிக்கப்படலாம் என்று பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
குறித்த படகுகளின் உரிமையாளர்களை அடையாளம் கண்ட பின்னர் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே குறித்த படகு உரிமையாளர்களின் பெயர் பட்டியலை தாம் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கொழும்புக்கு வந்துள்ள அவர் படகு உரிமையாளர்களின் பெயர் மற்றும் விபரங்களை உறுதிப்படுத்திய பின்னர் இலங்கை அதிகாரிகள் அவற்றை விடுவிப்பர் என்று சுவாமி கூறியுள்ளார்.

தாம். இலங்கையின் பாதுகாப்பு செயலாளருடன் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்கும் முயற்சிகள் தொடர்பாகவும் கலந்துரையாடியதாக சுவாமி தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீன நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கைக்கு வந்தமை தொடர்பில் இந்தியா மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply