இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்காத பட்சத்தில் அந்த நாட்டிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் யோசனையை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். பிரிட்டனின் பொதுச்சபையின் வெளிவிவகார குழுவே இந்த யோசனைiயை முன்வைத்துள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளது.
சர்வதேச விசாரணைகள் ஆரம்பமாகி சில மாதங்களாகிவிட்டதையும், அந்த விசாரணை மீது ஏற்படுத்தப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளையும் கருத்தில்கொள்ளும்போது, இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்கச் செய்வதற்காக, பொருளாதார தடைகள் உட்பட சகல சாத்தியப்பாடுகளையும் பிரிட்டன் பரிசீலிக்கவேண்டும்.
இலங்கை அரசாங்கம் சர்வதே விசாரணையாளர்களை இலங்கைக்குள் அனுமதிக்க மறுத்தால்,ஐ.நாவுடன் ஒத்துழைக்கும் மனித உரிமை பாதுகாவலர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி வரிச்சலுகையை நீக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் ஆராயவேண்டும் என பரிந்துரை செய்கிறோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கச்செய்வதற்காக இந்தியாவி;ன் புதிய அரசாங்கத்துடன் பிரிட்டன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும். என வெளிவிவகார குழு தெரிவித்துள்ளது.
















