சீனாவில் உள்ள ஒரு கோடீஸ்வரர் நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது சொந்த கிராமத்திற்கு வருகை தந்தார். தான் பிறந்து வளர்ந்த கிராமத்தின் மக்கள் எளிய மரத்தால் ஆன குடிசைகளில் வாழ்வதையும் அவர்கள் வருமானத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்ததையும் பார்த்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடிவு செய்தார்.
உடனடியாக அந்த பகுதியில் இருந்த சுமார் 72 மரத்தால் ஆன வீட்டை இடித்துவிட்டு அனைத்து வசதிகளையும் உடைய அபார்ட்மெண்ட் கட்டிடங்களை தனது சொந்த செலவில் இலவசமாக அனைவருக்கும் கட்டி கொடுத்தார். அதுமட்டுமின்றி அந்த பகுதிக்கு சாலை வசதி, மின்சார வசதி என அனைத்தையும் தனது செலவிலேயே செய்தார்.
மேலும் வறுமையின் பிடியில் இருந்த ஒருசில குடும்பங்களுக்கு தினமும் மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கவும் வழிவகை செய்துள்ளார். அந்த பகுதி மக்கள் அவரை தெய்வம் போல நினைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
Xiong Shuihua என்ற 54 வயது கோடீஸ்வர் Xiongkeng என்ற கிராமத்தைதான் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். அவருடைய சேவை மனப்பான்மையை சீன அரசு பாராட்டியுள்ளது. தான் பிறந்த கிராமத்தில் உள்ள ஒருவரும் கஷ்டப்படக்கூடாது என்பதே தனது விருப்பம் என அடக்கமாக அவர் இதுகுறித்து கூறியுள்ளார்.
















