உண்ணாவிரதம் இருந்த 17 கைதிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டார்களா? வெனிசுலாவில் பரபரப்பு.

venezuela-prioners-deadவெனிசுலா நாட்டில் உள்ள லாரா என்ற மாநிலத்தில் யுரிபனா என்ற பெயரில் ஒரு சிறை உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் சிக்கிய ஏராளமான கைதிகள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இங்குள்ள கைதிகளை, சிறை அதிகாரிகளும், காவலர்களும் கண்மூடித்தனமாக தாக்கி துன்புறுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இதனை கண்டித்து கைதிகள் அனைவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தொடர் உண்ணாவிரதம் நடத்தினர்.

இந்தநிலையில் உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் 17 பேர் திடீரென அடுத்தடுத்து மரணம் அடைந்ததால் அந்த சிறைச்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. . இதுகுறித்து சிறை அதிகாரிகள் கருத்து கூறும்போது கைதிகள் பயன்படுத்திய மருந்து பொருளில் விஷம் கலந்திருந்ததால் அவர்கள் இறந்ததாக தெரிவித்து உள்ளனர். ஆனால் சிறை அதிகாரிகள்தான் விஷம் வைத்து கைதிகளை கொன்றதாக கைதிகள் தரப்பில் இருந்து புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வெனிசுலா அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply