தமன்னாவை நெருங்கவிடாமல் காவல்காக்கும் ஆறு செக்யூரிட்டிகள். ஆர்யா படப்பிடிப்பில் பரபரப்பு

thamanaபையா நடிகரிடம் ஏற்பட்ட காதல் தோல்வியால்தான் தமன்னா கோலிவுட் பக்கமே கடந்த சில வருடங்களாக எட்டிப்பார்க்கவில்லை. அஜீத் படம் என்பதால் மறுக்க முடியாமல் வீரம் படத்தில் மட்டும் நடித்தார்.

இந்நிலையில் எம்.ராஜேஷ் இயக்கி வரும் ஆர்யாவின் ‘வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தபோது பத்திரிகையாளர் ஒருவர் படப்பிடிப்பின் இடையே புகுந்து தமன்னாவிடம் காதல் தோல்வி குறித்து கேள்வி கேட்டுள்ளார். இதனால் அப்செட் ஆன தமன்னா உடனடி படப்பிடிப்பில் இருந்து வெளியேறினார்.

இதனால் தற்போது தமன்னா படப்பிடிப்புக்கு கடும் செக்யூரிட்டி போடப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் அவரை நெருங்கவிடாமல் ஆறு செக்யூரிட்டி அதிகாரிகள் தமன்னாவை சுற்றி நின்று காவல் காத்து நிற்கின்றனர். தமன்னாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வரும் ரசிகர்களை கூட இந்த செக்யூரிட்டிகள் நெருங்கவிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply