ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 40வீத தமிழர் வாக்குகள் கிடைக்கும்!- சுப்ரமணிய சுவாமி

subramanianswamyஇலங்கையில் 40 வீதமான தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே தேர்தலில் வாக்களிப்பார்கள் என இந்திய பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்ரமணிய சுவாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றால் இலங்கை தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு கனவை நனவாக்க தான் உதவி புரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டரில் சுப்ரமணிய சுவாமி குறிப்பிட்டுள்ள இவ்விடயத்துக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளதுடன், இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தாமும் உதவி புரிவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மரண தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள் 5 பேரையும் விடுவித்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வாழ்த்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply