பதவி விலகினார் அஸ்வர்

aswarஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம் அஸ்வர் இன்றைய தினம் தனது ராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க சேனாநாயக்கவிடம் கையளித்துள்ளார். அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே அஸ்வர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அஸ்வர் கடந்த 2010ம் ஆண்டு தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். பாராளுமன்ற விவாதங்களின் போது எதிர்க்கட்சியினர் மீது சேறு பூசும் வகையிலான விமர்சனங்களை தொடர்ச்சியாக அஸ்வர் வெளியிட்டு வந்ததுடன் அண்மைய வரவு செலவுத் திட்ட விவாதம் வரையில் இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து இவ்வாறு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் என்ன காரணத்திற்காக பதவி விலகுவதாக அஸ்வர் இதுவரையில் தெளிவுபடுத்தவில்லை.தொடர்ந்தும் ஆளும் கட்சியில் நீடிப்பாரா அல்லது எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பாரா என்பது குறித்தும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை அவரது வெற்றிடத்துக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: , ,

Leave a Reply