விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஆம்பள’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் விஷாலுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஆம்பள படத்தின் சண்டைக்காட்சி ஒன்று ஊட்டி அருகே இன்று எடுக்கப்பட்டது. வில்லன்களுடன் ஆக்ரோஷமாக பறந்து பறந்து அடிக்கும் காட்சியில் விஷால் நடித்துக்கொண்டிருந்தார். ஒரு காட்சியில் விஷாலுக்கு கயிறு கட்டி தாவி அடிக்கும் காட்சி ஒன்று எடுக்கப்பட்டது. அப்போது விஷாலுக்கு கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்து விழுந்ததால் உயரத்தில் இருந்து அவர் கீழே விழுந்தார். காலில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை உடனடியாக படக்குழுவினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது.
‘பூஜை’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ததை போல ‘ஆம்பள’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய விஷால் தீவிரமாக இருக்கும் நிலையில் இந்த எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கூடிய விரைவில் குணமடைந்து விஷால் படத்தை முடித்துவிடுவார் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
















