கத்தி முனையில் திருட முயன்ற திருடனை கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள். சிலியில் பரபரப்பு

chilean-theif-captured-by-peopleசிலி நாட்டில் வயதான ஒரு பெண்மணியிடம் கத்தி முனையில் திருட முயன்ற ஒரு திருடனை பொதுமக்கள் பிடித்து விளக்கு கம்பத்தில் கட்டி வைத்து தாங்களாகவே தண்டனை கொடுக்க ஆரம்பித்தனர். இந்த சம்பவத்தின் தற்போது திருடனின் உயிர் ஊசலாடி வருகிறது.

சிலி நாட்டின் தலைநகர் சாண்டிகோ என்ற அகுதியில் 32 வயதான் பரேரா என்ற திருடன் சாலையில் நடந்து கொண்டிருந்த வயதான பெண்மணி ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றான். அந்த பெண்ணின் கூச்சலால் அருகில் இருந்தவர்கள் கூடி அந்த திருடனை பிடித்தனர். உடனடியாக அவனை சரமாரியாக அடித்த பொதுமக்கள் அருகில் இருந்த விளக்கு கம்பத்தில் நிர்வாணமாக கட்டி வைத்தனர். அந்த திருடனை கதற கதற சுற்றிலும் நின்றிருந்தவர்கள் பயங்கரமாக தாக்கினர். சுமார் 20 நிமிடங்கள் கழித்து இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு போலீஸார் விரைந்து வந்து திருடனை மீட்டினர்.

திருடன் போலீஸாரிடம் தன்னை காப்பற்றும்படி காலில் விழுந்து கெஞ்சியுள்ளான். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அந்த திருடன், ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிகிறது. ஆனால் திருடனை அடித்தவர்கள் போலீசார் வந்தவுடன் எஸ்கேப் ஆகிவிட்டதால் யாரையும் கைது செய்யவில்லை.

Tags: , , ,

Leave a Reply