கோத்தாவின் இரகசிய நடவடிக்கைகள் கசிந்தன!

Gotabaya5கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை இரவு பி.கியூ, 6182 என்ற இலக்க லொறி மூலம் எடுத்து வரப்பட்டு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான சேறுபூசும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த லொறி ஹெவன் காட் என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமானது எனக்கூறப்படுகிறது.

கொழும்பு புறக்கோட்டையிலுள்ள இந்த பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மகிந்த ராஜபக்ஷவின் இரகசியமான தேர்தல் பிரசார பிரிவாக இயங்கி வருவதாக தெரியவருகிறது.

அத்துடன் இந்த பாதுகாப்பு நிறுவனம் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பொறுப்பின் கீழ் இயங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தில் விசேட தேர்தல் நடவடிக்கைகளில் சிலர் பிரத்தியேகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு மாதாந்தம் தலா ஒரு லட்சம் ரூபா சம்பளம் வழங்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

Tags: , ,

Leave a Reply