மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியாவின் செல்வாக்கு! இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சந்திக்கிறார்

mithiribalaஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் எதிர்வரும் திங்கட்கிழமையன்று இலங்கையில் உயர் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
அத்துடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொதுவேட்பாளர் உள்ளடங்கிய தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

இதில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அவருக்கு துணையாக உள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களும் அடங்குகின்றனர்.

இதனை தவிர ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் அவர் சந்திக்கவுள்ளார்.

அரசியல் தரப்புக்களை கோடிட்டு தெ ஹிந்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கடல்வள பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான “காலி கலந்துரையாடல் 2014” ல் முக்கிய உரையை ஆற்றவுள்ள அவர், அதன் பின்னரே இலங்கை தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

காலி கலந்துரையாடலின் போது டோவல், இலங்கை மற்றும் மாலைதீவின் கடல் பாதுகாப்பு, சீனாவின் ஆதிக்கம் என்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடவுள்ளார்.

Tags: , ,

Leave a Reply