நோர்வேயில் தொடரும் நிறவெறி : நவநீதம்பிள்ளையிடம் ஒப்படைத்த பைல்களுக்கு என்னவானது?

navanethem-pillay9நோர்வேயின் குடியுரிமை பெற்றுள்ள இலங்கை உட்பட வெளிநாட்டவர்கள் மீதான நிறவெறி அடக்குமுறை செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றனவே தவிர அவற்றில் எந்தவித குறைவும் இடம்பெறவில்லையென பாதிக்கப்பட்ட தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

நோர்வேயில் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் பிள்ளைச் செல்வங்களை நோர்வே குழந்தைகள் காப்பகங்களால் கொண்டு செல்லப்படுவதுடன் அவர்களது கலாச்சாரங்களை சீரழித்து பெற்றோரிடமிருந்து நிரந்தரமாக பிரிந்து விடுவதற்கான திட்டமிட்ட வகையிலான சூழ்ச்சி நடவடிக்கைகளை நோர்வே சிறுவர் காப்பங்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளைகளை இழந்த பெற்றோர் தனது நிலைமைகளை வெளிப்படுத்தியும் தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு ஒரு வருடம் கடந்து விட்ட போதிலும் இதுவரையிலும் எந்தவித முன்னேற்றத்தையும் காணவில்லையென நோர்வேயில் வதிவுரிமை பெற்றுள்ளவர்களும் தமது குழந்தைகளை நோர்வே சிறுவர் காப்பங்களிடத்தில் பறிகொடுத்து நிற்பவர்களும் தெரிவிக்கின்றன.

2013 ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது முன்னாள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் கவனத்துக்கு கொண்டுவப்பட்ட மேற்படி விவகாரம் தொடர்பில் நோர்வேயின் குழந்தைகள் காப்பகத்தினால் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளை தெளிவுபடுத்தும் தமது குழந்தைகளை மீட்டுத் தருமாறு மன்றாடியும் எழுத்து மூலமான ஆவணக் கோவைகள் மூன்று நவநீதம்பிள்ளையிடம் வழங்கப்பட்டிருந்தன.

இதன் மூலம் தமது பிள்ளைகள் தமக்கு கிடைத்துவிடுவர் என்று இதுவரையிலும் எதிர்பார்த்திருந்த பெற்றோருக்கு ஏமாற்றம் மாத்திரமே எஞ்சியுள்ளது.

நோர்வேயில் வாழும் இலங்கையர்களே இந்த ஆவணக் கோவையை வழங்கியுள்ளனர்.
ஆனாலும் நவநீதம்பள்ளையிடம் கையளிக்கப்பட்ட ஆவணக் கோவைகள் அல்லது எழுத்து மூலமான முறைப்பாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக ஆகியுள்ளது.

அது மாத்திரமின்ற உலகம் முழுவதும் கண்களை விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் மனித உரிமைகள் பேரவை என்பன நோர்வேயில் இடம்பெற்று வருகின்ற அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டு கொள்ளாதாதிருப்பதாக நோர்வே வாழ் வெளிநாட்டு வதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நோர்வேயில் பொலிஸாரையோ நீதிமன்றங்களையோ இல்லாவிட்டால் அரசாங்கத்தையோ எந்தத் தரப்பினரையோ நம்பமுடியாதிருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள் நோர்வேயில் சிறுவர்கள் தொடர்பிலான அனைத்து செயற்பாடுகளும் தான்தோன்றித் தனமாக அமைந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

பெற்றோரிடமிருந்து சிறுவர்களை பிரித்து வைத்து இரு தரப்பினரையும் மன நோயாளிகளாக மாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply