பிலிப் ஹியூக்ஸ்ஸுக்கு இன்று பிறந்தநாள்

Philip-Hughesபவுன்சர் பந்தால் தலையில் காயம் ஏற்ப்பட்டு உயிரிழந்த பிலிப் ஹியூக்ஸ் இன்று தனது 26 வது பிறந்தநாளை கொண்டாட தயாராகியிருந்தார் என்ற உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்ரேலியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பவுலர் அப்பாட் வீசிய பந்தில் தலையில் காயம் ஏற்ப்பட்டு களத்திலேயே சுருண்டு விழுந்த ஹியூக்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் உலகமெங்குமுள்ள கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்த மற்றொருபுறம், நாளை பிலிப் ஹியூக்ஸ் 26வது பிறந்தநாளை கொண்டாட இருந்தார் என்ற தகவலும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

1988ம் ஆண்டு நவம்பர் 30ம்தேதி, பிலிப் ஹியூக்ஸ் பிறந்தார் என்பதால் நாளை அவருக்கு 26வது பிறந்த நாளாகும். பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுக்கெல்லாம் பிலிப் ஹியூக்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். இப்போது நண்பர்களும், உறவினர்களும் இதை சொல்லியே புலம்பியபடி உள்ளனர்.

இதேவேளை பிலிப் ஹியூக்ஸ் தலையில் அடிபட்டு வீழும்போது, அவரது தாயும், சகோதரியும் மைதானத்தில் இருந்து ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதனால் அவர்களும் மிகுந்த மனவேதனைக்கு உட்பட்டுள்ளனர்.

Tags: ,

Leave a Reply