சந்திரிகாவின் கும்பல் பிரிவினைவாத கும்பல்!– விமல் வீரவன்ஸ

vimal veerawansaசந்திரிகா கும்பல் பிரிவினைவாதிகளின் கும்பல் எனவும் இந்த பிரிவினைவாத கும்பல் கடந்த நாட்களில் வெளியிட்ட கருத்துக்கள் ஐக்கியப்படுத்தப்பட்ட நாட்டை மீண்டும் பிரித்து வேறுபடுத்தும் நோக்கத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

மாலபே பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

2005ம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது அவரது காலை பிடித்து இழுத்த சந்திரிகா தான் இன்றும் ஜனாதிபதியின் காலை பிடித்து இழுக்கிறார்.

சந்திரிகா காலை பிடித்து இழுக்கும் நேரத்தில் மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பல்வேறு தரப்பினருடன் இணைந்து சதித்திட்டங்களை மேற்கொண்டது.

இப்படியான சூழ்நிலையில், அன்றைய தேர்தலில் மகிந்த ராஜபக்ச 90 ஆயிரம் மேலதிக வாககுகளை பெற்றார். அந்த 90 ஆயிரம் வாக்குகள் கிடைக்காமல் போயிருந்தால், இரண்டாக பிளவுபட்ட நாடே எமக்கு எஞ்சியிருக்கும்.

அப்படி நடந்திருந்தால், நாட்டுக்காக போரிட்ட வறிய தாய், தந்தையரின் பிள்ளை வரிசையாக இன்னும் உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கும்.

சந்திரிகா அம்மையார் சுனாமி நிவாரண சபையை புலிகள் அமைப்புக்கு வழங்கவிருந்தார். அப்படி வழங்கப்பட்டிருந்தால், கடன் வழங்கும் உலக நிறுவனங்களிடம் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாத செயற்பாடுகளுக்காக அவர்கள் நேரடியாக நிதியை பெற்றிருப்பர்.

இதனால், நாங்கள் நீதிமன்றத்தில் சென்று சந்திரிகா வழங்க முன்வந்த சுனாமி நிவாரண சபையை ரத்துச் செய்தோம் எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படியிருந்த போதிலும் 2005ம் ஜனாதிபதித் தேர்தலில், வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காத காரணத்தினாலேயே மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றார்.

சுமார் 6 லட்சம் தமிழ் மக்கள் அந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை. அவர்கள் வாக்களித்திருந்தால் எதிரணி வேட்பாளரே வெற்றி பெற்றிருப்பார் அப்போது பேசப்பட்டது.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அன்றைய தேர்தலில் வாக்களித்திருந்தால், இறுதிக்கட்ட போரில் போன்று தமிழ் மக்கள் பெரும் இழப்புகள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்காது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply