இன்றைய ராசிப் பலன்கள் 01.12.2014

astrologyமேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். அரசு காரியங் கள் இழுபறியாகும். சாலை களை கவனமாக கடந்து செல்லுங்கள்.

வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங் கள் கைக்கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

மிதுனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர் கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கடகம்: கணவன்- மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியா பாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங் கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கன்னி: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்கு வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்: பணப்புழக்கம் அதி கரிக்கும். பிள்ளைகளால் சொந்தபந்தங்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வழக்கில் வெற்றி பெறுவீர் கள். வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை தேடுவீர் கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோக மான நாள்.

விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். அக்கம்பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

தனுசு: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். புது வேலை அமையும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தொழில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். அழகு, இளமைக் கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர் களால் ஆதாயமடைவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

Tags: 

Leave a Reply