ஷங்கர் படத்தின் பெயரில் ரூ 28 லட்சம் மோசடி! ஏமாந்த அப்பாவி வாலிபர்

Shankar-Images-6-1728x800_cஷங்கர் படத்தில் பெரும்பாலும் மக்களுக்கு நல்ல கருத்துக்கள் சொல்லும் விதத்தில் தான் இருக்கும்.

ஆனால், அவர் படத்தில் வில்லன் வேஷம் வாங்கி தரேன் என்று சொல்லியே ரூ 28 லட்சம் மோசடி செய்துள்ளார் ஒரு போலிஸ்காரர்.

இன்று சென்னை திருவான்மியூர் காவல்நிலையத்தில் வாலிபர் கொடுத்த புகாரில், முன்னாள் சென்னை கமிஷனர் நட்ராஜ் மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டு தனக்கு ஷங்கர் படத்தில் வில்லன் வேடம் வாங்கித்தருவதாக கூறி ரூ.28.5 வாங்கியுள்ளார்.

ஆனால்; அதன்பின்னர் அவர் தனக்கு எவ்வித வேடமும் வாங்கிக்கொடுக்காததால் பணத்தை திருப்பி கேட்டபோது துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும், இதுகுறித்து தான் வைத்திருந்த ஆதாரங்களை மிரட்டி பறித்துகொண்டதாகவும் புகார் அளித்துள்ளார்.

இது கோலிவுட் வட்டாரங்களில் மிகவும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.c

Tags: , ,

Leave a Reply