சுவிட்சர்லாந்திற்கு ஆண்டுதோறும் குடியேற வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்கவேண்டும் என Ecopop இயக்கம் போராட்டம் நடத்திவருகிறது.
சுவிஸில் குடியேற்றத்தை மொத்த மக்கள் தொகையில் 0.2 சதவிகிதமாக குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்மூலம் கடந்த பத்து ஆண்டுகளாக, சுவிஸில் ஆண்டுக்கு சராசரியாக 70,000 வெளிநாட்டவர்கள் குடியேறிவந்த நிலையில் 0.2 சதவிகிதமாக குறைத்தால் 16,000 என்ற எண்ணிக்கையில் மட்டுமே வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இந்த குடியேற்றத்தை தடுக்கும் விதமாக இதுதொடர்பாக வாக்கெடுப்பு நடக்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இயக்கத்தைச் சேர்ந்த ஒரு இயக்குனர் கூறுகையில், ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியில் கட்டுபாடற்ற அளவிற்கு மக்கள் தொகை பெருக அனுமதித்தால் நமது சுற்றுப்புறச் சூழலில் பெருமளவில் சேதம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறு குடியேற்றத்தை கட்டுபடுத்தினால் மட்டுமே 2050ம் ஆண்டில் சுவிஸில் 9 மில்லியன் மக்கள் தொகையாக இருக்கும் என்றும் இல்லையெனில் கட்டுப்பாடற்ற அளவில் 12 மில்லியனாக மாறிவிடும் என்று அந்த இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
















