14 வயது சிறுமியை தந்தை மற்றும் 3 உறவினர்கள் அடைத்து வைத்து கற்பழித்த கொடூரம்

Sexual-Abuse9ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவரை இவரது தந்தையும் தந்தையின் சகோதரரும் மற்றும் மனைவியின் சகோதரரும் வீட்டு சிறையில் அடைத்து வைத்து பல முறை கற்பழித்துள்ளனர்.

அந்த பெண் அடைத்து வைத்து இருந்த வீட்டில் இருந்து தப்பித்து உள்ளூர் மனித உரிமை ஆர்வலர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆர்வலர்கள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர் என உள்ளூர் பத்த்ரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் சிறுமியின் தந்தை உட்பட 3 பேரை கைதுசெய்தனர்.

சிறுமி பல மாதங்களாக வீட்டுசிறையில் சிறைவக்கப்பட்டு உள்ளார். வெளியே எந்தவித தொடர்பும் அவரால் கொள்ள முடியவில்லை. அந்த சிறையில் இருந்து தப்பிய பின்னர் அவர் மனித உரிமை அமைப்பிடம் கூறி விடுதலை அடைந்துள்ளார்.

இது குறித்து அந்த சிறுமி கூறும் போது, தனது சொந்த தந்தை மற்றும் 2 உறவினர்களால் பல முறை கற்பழிக்கபட்டதாகவும், அதற்கு தாயார் உடந்தையாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

பொது செயலாளர் காலித் அல் ஹூசானி சிறுமி வீட்டில் டெலிபோன் தொடர்பு கொல்லக்கூட முடியாதவாறு அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினருக்கு புகார் செய்தோம், மேலும் இது குறித்து எமிரேட் அரசு குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கும் தகவ்ல் கொடுத்துள்ளோம்.

ஹூசானி குறிப்பிடும் போது அது ஒரு உடைந்த குடும்பம் என குறிப்பிட்டார் அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை குறிப்பிடவில்லை.

Tags: , ,

Leave a Reply