பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முகாமின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை இடம்பெறும் இடம் சாதாரண சிப்பாய்களுக்கு தடை செய்யப்பட்ட வலயமாகவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலக பணியின் பொறுப்பாளராக ஜனாதிபதியின் இரண்டாவது மகன் கடற்படை அதிகாரி யோசித்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
எமக்கு இத்தகவலை வழங்கிய கடற்படை அதிகாரியின் மேலதிக தகவல்படி, இந்த அலுவலகத்தில் கள்ள வாக்குச்சீட்டு அச்சிட சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தால் அமைக்கப்பட்டுள்ள விசேட பிரிவின் மூலம் எதிர்வரும் நாட்களில் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் திட்டத்தை நாவல பொது சந்தை கிணற்றிற்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடம் விசேட குழுவொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சீன தொழிநுட்பத்தின் ஊடாக வாக்களிப்பு முடிவுகளை அறிவிப்பது தொடர்பான நடவடிக்கை இங்கு இடம்பெறவுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்… இந்த சட்டவிரோத நடவடிக்கையுடன் தொடர்புடைய நபர்களின் பெயர் விபரங்கள் கொண்டு அனைத்தையும் வெளியிடுவோம் என்ற எச்சரிக்கையை நாம் விடுக்கிறோம்.
என்று லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடற்படையினருக்குச் சொந்தமான வெலிசர கடற்படை முகாமில் இதுவரை பொருத்தப்பட்டிருந்த இயந்திரம் ஒன்றை அகற்ற வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விசேட அச்சு இயந்திரம் ஒன்று பொருத்தும்














