பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை மாத்திரமே நான் அரசியலுக்கு அறிமுகப்படுத்தினேன். பசில் ராஜபக்ச மற்றும் சமல் ராஜபக்ச ஆகியோர் பண்டார நாயக்கா குடும்பத்தினராலேயே அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்டவர்கள். – இவ்வாறு கூறியுள்ளார் மகிந்த ராஜபக்ச. குடும்ப அரசியலை அறிமுகப்படுத்தியதாக பலரும் குற்றம் சுமத்துகின்றனர். நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சவை மாத்திரமே அரசியலுக்கு அறிமுகப்படுத்தினேன். அமைச்சர் பசில் ராஜபக்ச 1977 ஆம் ஆண்டு அரசியலுக்குள் பிரவேசித்தார். அவர் சிறிலங்கா சுதந்திர கட்சியில் சிறிமாவோ பண்டாரநாயக்கா மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயகா ஆகியோருடன் இணைந்து அரசியலில் ஈடுபட்டார் .
அதேபோன்று சபாநாயகர் சமல் ராஜபக்ச சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசியலில் இருந்த காலத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டிருந்தார். நான் அவர்களை அரசியலுக்கு கொண்டுவரவில்லை. அவர்களை பண்டாரநாயக்கா குடும்பத்தினரே அரசியலுக்கு கொண்டுவந்தனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை மாத்திரமே கொண்டுவந்தேன். இங்கு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே அவரை கொண்டுவந்தேன். அவருக்கு கொடுக்கப்பட்ட கடமையை அவர் சரியாகச் செய்து முடித்துள்ளார். என நிதி அதிகாரிகள் சங்கத்தினருடன் கொழும்பில் நடாத்திய சந்திப்பிலேயே அவை இதனை தெரிவித்துள்ளார்.
















