இன்றைய ராசி பலன்கள் 03.12.2014

astrology16மேஷம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வேற்றுமதத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாவார்கள்.

வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அமோகமான நாள்.

மிதுனம்: புதிய சிந்தனை கள் மனதில் தோன்றும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

கடகம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். சொந்த, பந்தங்கள் தேடி வருவார்கள். வியா பாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். தைரியம் கூடும் நாள்.

கன்னி: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியா வசிய செலவுகள் அதிகரிக் கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியா வசிய செலவுகள் அதிகரிக் கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

தனுசு: கணவன்,மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வேற்றுமதத்தவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

மகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் அறிமுகமாவார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

கும்பம்: கணவன்,மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். இனிமையான நாள்.

Tags: 

Leave a Reply