ஜனநாயக உரிமைகளை முடக்கவே மஹிந்த மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்

ranil_unpஅரசியல் கட்சிகளை முடக்கி ஜனநாயக கோட்பாடுகளை இல்லாதொழிக்கவே ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது முறையாகவும் தேர்தலில் போட்டியிடுகிறார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்

விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எமது ரி.ரி.என் இணையத்தள செய்தியாளர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ரணில் இதனை தெரிவித்தார்.

ஜனநாயகத்தை அழித்து குடும்ப ஆட்சியை மீண்டும் நிறைநிறுத்த முயற்சிக்கும் மஹிந்தவின் திட்டத்தை தோற்கடிக்க வேண்டும். அதற்கு இந்த நாட்டு மக்கள் முன்வரவேண்டும் என ரணில் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply