ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவின் சிவில் உரிமைகளை உறுதி செய்வதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு சில மணித்தியாலங்களில், சரத் பொன்சேகாவின் சிவில் உரிமைகள் உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சரத் பொன்சேகாவின் இராணுவ பதவிகளும் வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது சரத் பொன்சேகாவே இலங்கையின் இராணுவத் தளபதியாக கடமையாற்றியிருந்தார்.
சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டிருந்த ஜெனரல் பட்டம் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ நீதிமன்றில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு விசாரணைகளின் போது குற்றவாளியாக்கப்பட்ட சரத் பொன்சேகாவிற்கு இரண்டரை ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால் தாம் சரத் பொன்சேகாவின் இராணுவப் பதவிகளை மீளவும் வழங்க உள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலர் எதிர்ப்பை வெளியிட்ட போதிலும், வெளிப்படையாக எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















