சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அரச பயங்கரவாதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
லுனுகம்விஹர என்னும் இடத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் பாரிய திட்டங்களின் மூலம் ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் உண்மையான விபரங்கள் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு புலனாய்வு செய்திகளை அம்பலப்படுத்திய லசந்த விக்ரமதுங்க இதன் ஓர் கட்டமாகவே மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார். இந்த படுகொலைக்கு அரச பயங்கரவாதமே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பொது வேட்பாளர் உள்ளிட்ட தரப்பினர் பங்கேற்ற சடன என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சில அலைவரிசைகளில் இருட்டடைப்பு செய்யப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
காலநிலை காரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சி தடைப்பட்டதாக அரசாங்கம் குறிப்பிடுவதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
















