வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது, பெயரை நாட்டில் யாரும் சூட்டக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு ஜனாதிபதியான கிம் ஜாங், தான் ஆட்சிக்கு வரும் முன்பே தனது பெயரை நாட்டில் யாரும் சூட்டக்கூடாது என கூறியதாக தொலைக்காட்சி ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் ஏற்கெனவே அவரது பெயரைக் கொண்டுள்ளவர்கள் தங்கள் பெயரை நடப்பிலும் கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்திலும் மாற்ற வேண்டும் என்றும் அதை மீறனால் தண்டக்கப்படுவர் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வடகொரியா தலைவர்களின் பெயர்களை மற்றவர்கள் சூட்டிக்கொள்ளக்கூடாது என்ற ஆணை இதற்கு முந்தைய தலைவர்களது ஆட்சிக் காலத்திலும் நடப்பில் இருந்ததால் இந்த ஆணை உண்மையாக இருக்கலாம் என அரசு ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
















