மகிந்தவின் பதாதைகளை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு

Mahinda-desappriaகொழும்பு நகரத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பதாகைகள் வைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிரணி பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்று, இரவோடு இரவாக கொழும்பு நகரம் முழுவதும் ஜனாதிபதி மகிந்தவின் தேர்தல் பதாகைகள் வைக்கப்பட்டன.

இந்த பதாகைகள் தனித்துவமான கொழும்பு நகரின் அழகை கெடுக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது.

இதேவேளை மாநகர சபை தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்த நடவடிக்கைளை தடுக்கும் சட்ட உரிமையை கொண்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்படட்டது.

இதேவேளை மநாகர சபை சார்பாக கொழும்பு நகரில் வைக்கப்பட்டுள்ள மகிந்தவின் தேர்தல் பதாகைகளை நீக்குமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்தது.

குறித்த பதாகைகளை அரசாங்கம் ஏன் திருட்டுத்தனமாக வைக்கின்றது என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அத்துடன் ஜனாதிபதி மகிந்தவின் தேர்தல் பதாகைகள் குறித்த கேள்விக்கு எல்லா கட்சிகளும் வைப்பதால் நாங்களும் வைக்கின்றோம் என்று அமைச்சர் ஹெகலியரம்புக்வெல பதில் அளித்தார்.

இதேவேளை புத்தளம், சிலாபம் உள்ளிட்ட பகுதிகளில் தேவாலயங்களை அண்டிய பகுதிகளில் பாப்பரசருடன் ஜனாதிபதி மகிந்த நிற்கும் பதாகைகள் இன்னமும் அகற்றப்படாமல் காணப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

தேர்தல் தொடர்பான பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை உடனடியாக அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் 8ஆம் திகதியே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, இவ்வாறான பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கு தேர்தல் ஆணையாருக்கு அதிகாரம் உள்ளது. எனினும் தற்போதே ஆணையாளர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

சுவரொட்டிகளை அகற்றுமாறு கொழும்பு மாநகர சபைக்கும் ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த சுவரொட்டிகளை அகற்றுவதற்கு உள்ளுர் நிர்வாகங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படடுள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,

Leave a Reply