அரசாங்கத்திற்கு எதிராக ஊடகப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது – ஜனாதிபதி

Mahinda9அரசாங்கத்திற்கு எதிராக ஊடகப் பிரச்சாரம் செய்யப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். திட்டமிட்ட வகையில் இந்த ஊடகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 3ம் திகதி சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு எதிராக தொலைபேசி மூலம் அவதூறு பிரச்சாரம் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்;டுள்ளார்.

இவ்வாறான ஊடக பிரச்சாரங்களை வெற்றிகரமாக எதிர்நோக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் தொடர்பில் ஓர் வலுவான பொறிமுறைமையை அமைப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே எதிர்காலத்தில் தனியார் ஊடகங்கள் மீது சில அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என அரசியல் ஆய்வார்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply