குழந்தைகளை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளுமாறு அரசு உத்தரவு

Home-babyசர்வதேச வழிகாட்டி நெறிமுறைகளைத் தகர்த்து, பிரிட்டன் அரசாங்கம் தன் நாட்டுப் பெண்களிடம் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டிற்கான தேசிய சுகாதார அமைப்பின் புதிய வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான குழந்தைகளை மருத்துவமனைக்கு வெளியே பெற்றெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையைப் போலவே வீட்டிலும் பாதுகாப்பான பிரசவம் பார்க்க முடியும் என்றும் முதல் குழந்தையைப் பிரசவிக்கும் பெண்களுக்கு மட்டும் வீட்டில் கூடுதல் கவனிப்பு தேவை என்றும் தேசிய சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

ஆனால், டாக்டர்கள் இல்லாமல் பெண்களை வீட்டிற்குள் பிரசவிக்க அரசு கட்டாயப்படுத்துவதாக சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இதுகுறித்து கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறுகையில், “வீடோ மருத்துவமனையோ அந்தப் பெண்ணுக்கு சிறப்பு தகுதி பெற்ற மருத்துவர் முன்னிலையில்தான் பிரசவம் நடைபெறும். மேலும் தன் குழந்தை எங்கு பிறக்க வேண்டும் என்பது ஒரு தாயின் விருப்பம் சார்ந்தது” என்று தெரிவித்தார்.

Tags: ,

Leave a Reply