இன்றைய ராசி பலன் (2014.12.05)

astrology16மேஷம்
ஆனந்தம் கூட ஆறுமுகப் பெருமானை வழிபட வேண்டிய நாள். முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சி கூடும்.

ரிஷபம்
முன்னேற்றம் அதிகரிக்க முருகப் பெருமானை வழிபட வேண்டிய நாள். புத்திசாலித்தனமான செயல்பாடுகள் மூலம் உங்கள் புகழ் கூடும். கொடுக்கல் & வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வருவீர்கள்.

மிதுனம்
கவலை தீரக் கந்தனை வழிபட வேண்டிய நாள். தொழில் ரீதியாக மேற்கொண்ட பயணம் தொகையை வழங்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

கடகம்
மகிழ்ச்சி பெருக மயில்வாகனத்தானை வழிபட வேண்டிய நாள். போன்மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.

சிம்மம்
காரிய வெற்றி காண கார்த்திகேயனை வழிபட வேண்டிய நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். நண்பர்கள் உங்களின் மனமாற்றத்தைக்கண்டு வியப்படைவர்.

கன்னி
மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். விரயங்கள் கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு ஆச்சரியப்படவைக்கும்.

துலாம்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். விரயங்கள் கூடும். சிரித்துப்பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். மறதியால் சில பணிகளைச் செய்ய விட்டுவிடுவீர்கள். உடல் நலனில் கவனம் தேவை.

விருச்சகம்
கனதனம் பெருகக் கந்தப் பெருமானை வழிபட வேண்டிய நாள். பயணங்களால் பலன்கிடைக்கும். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

தனுசு
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பழைய பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். தொழிலில் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.

மகரம்
கிரிவலம் வந்து கீர்த்தியடைய வேண்டிய நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

கும்பம்
பணத் தேவைகள் பூர்த்தியாக பரமசிவன் மைந்தனை வழிபட வேண்டிய நாள். அஞ்சல் வழியில் அனுகூலச் செய்தி வந்து சேரும். தொழில் வளர்ச்சி பெருக அனுபவமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மீனம்
தன்னம்பிக்கை கூடும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆலய வழிபாடு அமைதியை வழங்கும்.

Tags: 

Leave a Reply