வலி மேற்கு, சுன்னாகம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

sith-helpவலி மேற்கு, சுன்னாகம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம் பெயர் உறவுகளான சுவிஸ், ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் நோர்வே நாடுகளிலுள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தோழர்கள் உதவிகளை வழங்கியுள்ளனர். கடந்த 03.12.2014 புதன்கிழமை அன்று மூளாய் தேவாலயம், சுழிபுரம் காட்டுப் புலம், சுழிபுரம் பாண்டுவட்டை, வட்டுக்கோட்டை இன்பச்சோலை, முளாய் வீரவத்ததை தேவாலயம் மற்றும் கந்தரோடை முகாம் பகுதிகளில் தஞ்சம் அடைந்திருந்த சுமார் 1000 பேருக்கு .இரண்டு இலட்சம் ரூபா செலவில் உணவுப் பொதிகள், வெற்றுச் சாக்குகள் பால்மாவகைகள், நுளம்புத் திரிப்பெட்டிகள் மற்றும் மருநது வகைகள் என்பன இதன்போது வழஙகிவைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன், வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், புளொட்டின் நோர்வேகிளை அமைப்பாளர் இராசசிங்கம் சிவராஜா (ராஜன்) மற்றும் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு மக்களுக்கான பொருட்களை வழங்கி வைத்திருந்தனர்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள், தேவைகள் குறித்து ஆராய்வு

03.12.2014 அன்று வலி மேற்கின் பல பகுதிகளிலும் பெய்த கடும் மழைகாரணமாக மக்கள் பலரும் தமது குடியிருப்புக்களை விட்டு இடம்பெயாந்து அல்லல்படட்னர் இவ் வேளை முளாய் பகுதியிலுள்ள அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை காட்டுப்புலம் பாடசாலை, இன்பச்சோலைப் பகுதி மற்றும் அராலி ஐயனர் கோவில் பகுதிகளில் இந்த மக்கள் தஞ்சம் புகுந்தனர் இவ் நிலைமையை உடனடியாக வலிமேற்க பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரனுக்கு அறியப்படுத்தியதை தொடர்ந்து உடனடியாக தவிசாளர் அவ் விடத்திற்கு வருகை தந்து மக்களின் அடிப்படை விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். இவ் விடயம் குறித்து அறிந்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ன உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் உடனடியாக மக்கள் தஞ்சம் அடைந்த இடத்திற்கு வருகை தந்தார். அவருடன் புளொட்டின் நோர்வே கிளை அமைப்பானர் திரு இராசசிங்கம் சிவராசா (ராஜன்) அவர்களும் வருகை தந்திருந்தார் இவ் நிலையில் அப்பகுதி கிராம சேவகர் சிறிரஞ்சன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களும் வந்திருந்தனர். இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களுடைய தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்கள்.

Tags: ,

Leave a Reply