இரண்டு வேட்பாளர்களுக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை : பொதுபலசேனா அதிரடி

pothuஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என பொதுபலசேனா அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

அதன்படி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது. அதற்காக மைத்திரிபாலவுடன் இணைந்து கொண்டுள்ள நபர்களின் கடந்த கால மற்றும் தற்கால நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க செயற்பட்டுள்ளார். எனவே மைத்திரிபால சிறிசேனவை நம்ப முடியாது என பொதுபலசேனா குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு மட்டுமல்ல, அரசிற்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என பொதுபலசேனா தெரிவித்துள்ளது.

Tags: ,

Leave a Reply