தனியொரு குடும்பம் நாட்டை அழிக்கிறது; பாலித தெவரப்பெரும

palithaநாட்டை, தனியொரு குடும்பம் அழித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சலூன் கதவில் தற்போது பயனில்லை. போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்பதனை ஒப்புக்கொள்கின்றோம்.

எனினும் நாட்டின் சட்டம் ஒழுங்கு, கல்வித்துறை, ஒழுக்க விழுமியங்கள் சீரழிந்துள்ளன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு முனைப்பு காட்டத்தவறியுள்ளது.

ஒரு குடும்பம் கூட்டிணைந்து இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு நகர்த்தியுள்ளது. இதனை தடுக்கும் நோக்கிலேயே சகல சக்திகளும் ஒன்றிணைந்துள்ளன என பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply