தேசிய அரசே சிறுபான்மையினரின் பிரச்சினையை ஆராயும்; மைத்திரிபால சிறிசேன

mithiribalaதேசிய அரசே சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் என எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனது முதல் 100 நாள் நடவடிக்கைத் திட்டத்தில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து எதுவும் உள்ளடக்கப்படவில்லை, எனினும் தேர்தலின் பின்னர் அமைக்கப்படவிருக்கும் தேசிய அரசே அதனை ஆராயும்.

எனது கூட்டணியில் பல அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, சரத் பொன்சேகா அவர்களது கட்சி, ஹெல உறுமய என பல அரசியல் கட்சிகள் எங்கள் அமைப்பில் உள்ளன. அதனை விட பல பொது அமைப்புக்களும் அதில் அடங்குகின்றன.

எங்களது கூட்டணியில் செயற்திட்டமாக 100 நாள்களுக்கான திட்டம் ஒன்றை நாங்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்.

இந்த 100 நாள் திட்டத்தில், நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழித்தல், அரசியலமைப்பில் மாற்றம் செய்தல் மற்றும் வறிய மக்களின் நலன்களுக்கான பொருளாதார மறுசீரமைப்பு ஆகியன அடங்கியுள்ளன. இதில் ஏனைய விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை.

ஆனால், தேர்தலுக்குப் பின்னர் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியவாறான ஒரு தேசிய அரசை நாங்கள் அமைப்போம்.

அந்த அரசு சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும். ஒருவேளை தற்போது இருக்கும் நாடாளுமன்றத்தில் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கான சூழ்நிலை ஏற்படவில்லையானால், இந்த நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,

Leave a Reply