சிரியாவில் சிறை பிடிக்கப்பட்ட இராணுவ படையினரை மிக கொடூரமாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தலை துண்டித்து படுகொலை செய்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
சிரியாவின் டெயில் எஸோர் என்ற இராணுவ விமான நிலையத்திற்கு அருகே உள்ள அரசாங்க தளத்தின் மீது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன் அங்கிருந்த சிறைப்பிடிக்கப்பட்ட படையினருக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர்.
இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், தலை துண்டிக்கப்படும் முன் படைவீரர்கள் தீவிரவாதிகளிடம் தங்களது உயிர்களுக்காக கெஞ்சுகின்றனர்.
அத்துடன் இராணுவ விமானத்தளத்தில் இருந்த இராணுவ உபகரணங்களை திருடுவது போன்ற காட்சிகளும் உள்ளது.
மேலும் அதில் ஐஎஸ் தீவிரவாதிகள் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்துவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
















