உலகம் முழுவதும் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறது சோனியின் ஸ்மார்ட் வாட்ச்.
ஸ்மார்ட் போன்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நிலையில், ஸ்மார்ட் வாட்சுகள் தயாரிக்கும் மும்முரத்தில் இறங்கிவிட்டன பல முன்னணி நிறுவனங்கள்.
தொழில்நுட்ப உலகின் அடுத்த கட்டம் வியரபிள் கணனிகள் தான்(wearable computers) என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது.
மின் காகித நுட்பத்தின் அடிப்படையில் சோனி ஸ்மார்ட் வாட்ச் இ-பேப்பரை உருவாக்கியுள்ளது.
இது சம்மந்தமான வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது, இவ்வகையான வாட்சுகளை உருவாக்குவதில் மிகப் பெரிய ஆர்வத்தில் இருக்கும் சோனி, வருங்காலத்தில் பேஷன் துறை சார்ந்த தயாரிப்புகளை உருவாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
















