கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்களிலும் பக்தர்கள் தம் வீடுகளிலும் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். ஆனால் கார்த்திகை தீபத் திருவிழாவிலும் அதிகமுகவினர் வழக்கம்போல அம்மாவைதான் வழிபட்டனர்.
தீபத்திருவிழாவையொட்டி கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெயரில் தமிழகத்தில் பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர். இதில் உச்சகட்டமாக நீலாங்கரையில் அதிமுகவினர் திருநீலகண்டர் சிவன் கோவிலில், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும், நீடுழி வாழவேண்டும் என்று கோரி 1008 விளக்குகள் ஏற்றினர்.
1008 விளக்குகளில் ஜெயலலிதாவைக் குறிக்கும் வகையில் “அம்மா “ என்ற எழுத்துக்கள் வரும்படி செய்து தஙகள் விசுவாசத்தை காட்டி அசத்திய அதிமுகவினரைக் கண்ட பொதுமக்கள், கார்த்திகை தீபத்திருவிழாவிலும் அதிமுகவினருககு அம்மா விசுவாசம்தானா? எனக் கேட்டபடி நகர்ந்தனர்.
நிகழ்ச்சியில் கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா மற்றும் அ.தி.மு.கவினர் பலர் கலந்து கொண்டனர். சென்னை மாநகராட்சி தணிக்கை நிலைக்குழு தலைவர் எம்.சி.முனுசாமி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
-மு. செய்யது முகமது ஆஸாத்
















