2015ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
கடந்த 24ஆம் திகதி கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய தற்போதுவரை 16 அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாளையதினம் தேர்தலில் போட்டியிடுவோர் தங்களுடைய வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.
அதற்காக காலை 09.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலக அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
மேலும் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளையும் அன்றையதினம் காலை 09.00 மணிமுதல் 11.30 வரை தெரிவிக்கமுடியும் எனவும் தேர்தல்கள் செயலகம் மேலும் அறிவித்துள்ளது.
















