எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதென நேற்றுக்காலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐ.தே. கட்சியின் விசேட மாநாடு நேற்றுக்காலை அக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்றது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் உட்பட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற பிரேரணையை ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. முன்மொழிந்தார். பிரேரணையை பதுளை மாவட்ட எம்.பி. கே.வேலாயுதம் வழிமொழிந்தார். மாநாட்டில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.
















