இன்றைய ராசி பலன் (2014.12.07)

astrology2மேஷம்
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நீண்ட தூரப் பயணங்கள் நினைத்த பலனைத் தேடித்தரும்.

ரிஷபம்
நிதி நிலை உயரும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொதுவாழ்வில் ஈடுபட்டு புகழ் சேர்ப்பீர்கள். குழந்தைகளால் பெருமைகள் வந்து சேரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

மிதுனம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்கத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் உண்டு.

கடகம்
இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். விரயங்கள் ஏற்படாதிருக்க எதையும் யோசித்துச் செய்வது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

சிம்மம்
லாபம் அதிகரிக்கும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் இனிமையாக அமைய புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

கன்னி
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.

துலாம்
தடைகள் அகலும் நாள். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். பெண்வழிப்பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும். பங்காளிபகை மாறும்.

விருச்சகம்
காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடலாம். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம்.

தனுசு
உறவினர் வருகையால் உள்ளம் மகிழும் நாள். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினை தீரும். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

மகரம்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். உற்றார், உறவினர்கள் கைகொடுத்துதவ முன்வருவர். அக்கம், பக்கத்து வீட்டாரிடம் ஏற்பட்ட பகை மாறும். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாகப்பேசி சமாளிப்பீர்கள்.

கும்பம்
அதிர்ஷ்டமான நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பூர்வீக சொத்துக்களால் முறையான லாபம் கிட்டும்.

மீனம்
உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். வரவு திருப்தி தரும். தொலை தூரத்தில் இருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

Tags: 

Leave a Reply