விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதி தருணங்களில் கடற்படைத்தளபதி வசந்தகரனாகொடவிற்கும் தனக்கும் கருத்து வேறுபாடு நிலவியதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கடற்படைத்தளபதி விடுத்தவேண்டுகொள் ஒன்று தரைப்படையின் முன்னேற்றத்தை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தான் ஏற்றுக்கொள்ள மறுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தடவை வடக்கில் விடுதலைப்புலிகளுடன் நேரடி மோதல் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகில் தனது கடற்படை படகுகளை நிறுத்த கடற்படை தளபதி அனுமதியை கோரியதாகவும், இராணுவம் கடற்படை படகுகள் மீது தவறுதலாக தாக்குதலை மேற்கொள்ளலாம் என்பதால் தான் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளை தோற்கடிக்க நிறைவேற்று அதிகார முறை தேவைப்படவில்லை தானே அனைத்து முடிவுகளையும் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
















