இன்றைய ராசி பலன்கள் 08.12.2014

astrologyமேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தோர் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பர். அதிகாரப்பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்: கடந்த 2 நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். உற்சாகமான நாள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

கடகம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாவீர்கள். உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். போராடி வெல்லும் நாள்.

சிம்மம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பெற்றோர் ஆதரிப்பார். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் பலம் பலவீனத்தை கண்டறிவீர்கள். கடையை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சி பலிதமாகும். புது திட்டம் நிறைவேறும் நாள்.

கன்னி: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.

துலாம்: கடந்த 2 நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். தடைகள் உடைபடும் நாள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களை யெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

தனுசு: உங்களின் அறிவாற் றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மகரம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

மீனம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். பிள்ளை களால்ஆறுதல் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.

Tags: 

Leave a Reply