தங்கத்தை கைய­ளித்தால் மட்டும் போதாது அந்த அப்­பாவி மக்­களின் ஆக்­கி­ரமிக்­கப்பட்ட காணி­க­ளையும் மீளளிக்க வேண்டும்

Mavai-Senathirajah3விடு­தலைப் புலி­க­ளி­ட­மி­ருந்து மீட்கப்­பட்ட தங்க நகை­களில் அதன் உரி­மை­யா­ளர்கள் 1960 பேருக்கு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அவற்றை மீள­ளித்­துள்ளார்.

அதே­வேளை, சுமார் மூன்­றரை இலட்சம் பேர் மீளக் குடி­யேற்­றப்­ப­டாமல் அவர்களின் காணிகள் ஆக்கி­ர­மிக்­கப்­பட்டுள்ளன. இந்­த­நிலையில் தங்கத்தை கைய­ளித்தால் மட்டும் போதாது அந்த அப்­பாவி மக்­களின் ஆக்­கி­ரமிக்­கப்பட்ட காணி­க­ளையும் மீளளிக்க வேண்டும். தங்­கத்தை விட வும் பெறு­ம­தி­யா­னது அவர்­களின் பூர்­வீக நிலங்கள் என தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வ­ர் மாவை சேனா­தி­ராஜா வாரப்பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அப்பத்திரிகையில் மேலும் தெரிக்கப்பட்டுள்ளதாவது,

சொத்­துக்­களை இழந்த மக்கள் சொல்­லொணாத் துய­ரங்­க­ளோடு வாழ்­கின்­றனர். போர் முடிந்து 5 வரு­டங்கள் முடிந்த நிலை­யி­லேயே இந்த நகைகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இது­வரை காலம் இவை எங்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தன என்று தெரி­ய­வில்லை. கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது இடம்­பெற்ற பிர­சா­ரத்தின் போது, அர­சாங்­கத்­திடம் புலி­களின் 200 கிலோ தங்க நகை­களும் புலி­களின் கோடிக்­க­ணக்­கான வெளி­நாட்டு கரன்ஸி நோட்­டுக்­களும் அர­சிடம் கைய­ளிக்­கப்­பட்­ட­தாக முன்னாள் இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சேகா பகி­ரங்­க­மாகக் கூறி­வந்தார். அவ்­வா­றானால், அவற்­றுக்கு என்ன நடந்­தது? அவற்றின் உண்­மை­யான பெறு­மதி என்ன? என்­பதைப் பகி­ரங்­க­மாக அரசு கூற வேண்டும்.

அதே­வேளை, நகை­களை ஜனா­தி­ப­தியா? நீதி­மன்­றமா? கைய­ளிப்­பது என்ற கேள்­வியும் இத்­த­ரு­ண­ததில் எழவே செய்­கின்­றது.

எவ்­வா­றெ­னினும், வட பகுதி மக்கள் மீது உண்­மை­யான அக்­கறை இருந்தால் அவர்­களின் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பூர்­வீக நிலங்­களை மீளக் கைய­ளிக்க வேண்டும். யுத்தம் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்த 3 இலட்சம் மக்கள் தொடர்ந்தும் அக­தி­க­ளா­க­வுள்­ளனர். இவர்­களில் இரண்டு இலட்சம் பேர் இந்­தியா உட்­படப் பல்­வேறு இடங்­க­ளிலும் இடம்­பெ­யர்ந்து வாழ்­கின்­றனர். ஏனைய ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மான மக்கள் உள்­நாட்­டிலும் உள்­ளனர்.

இவர்­க­ளது காணிகள் அத்­து­மீறி ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள நிலையில் தொடர்ந்தும் மீளக் குடி­யேற முடி­யாத நிலையில் காணப்­ப­டு­கின்­றனர். கடந்த 20 தொடக்கம் 30 வருட கால­மாக அகதி வாழ்க்­கையே தொடர்ந்து வரு­கின்­றது.

தமது பூர்­வீக விளை நிலங்கள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட நிலையில் அவர்கள் மிகுந்த கஷ்­டங்­க­ளுக்கும் மன அழுத்­தங்­க­ளுக்கும் ஆளா­கி­யுள்­ளனர். தங்க நகை­களை விடவும் மிகவும் பெறு­ம­தி­மிக்­கது அவர்­களின் விளை நிலங்­க­ளாகும். அந்­த­வ­கையில், தமது விளை நிலங்கள் மீளக் கைய­ளிக்­கப்­பட வேண்­டு­மெனக் கூறி குறித்த மக்கள் போராட்­டங்­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்­றனர். எனினும் இது குறித்து அர­சாங்கம் கவ­னத்தில் கொள்­வ­தாக இல்லை. அதி­யுயர் பாது­காப்பு வலயம் கார­ண­மாக சுவீ­க­ரிக்­கப்­பட்ட தமது காணிகள் மீளக் கிடைக்­கு­மென சுமார் 20 தொடக்கம் 30 வரு­டங்­க­ளாக ஏங்­கிய நிலையில் பலர் தமது வயோ­தி­பத்­தையும் எட்­டி­விட்­டனர். எனவே, இந்த நிலை­யி­லா­வது அவர்­களின் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட காணி­களை மீள வழங்க வேண்டும்.

அதே­வேளை, காணாமல் போன­வர்கள் மற்றும் சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தொடர்பில் அவர்­களின் உற்றார் உற­வி­னர்கள் சதா கண்ணீர் வடித்­த­வர்­க­ளாக உள்­ளனர். எனவே அர­சாங்கம் அது தொடர்பில் சிந்­திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளர் என அப்பத்திரிகை தெரிவத்துள்ளது.

Tags: , ,

Leave a Reply