உல்லாசமாக இருந்தப் பெண் பணம் கேட்டதால் கொலை செய்த வாலிபர்: பரபரப்பு வாக்குமூலம்

sexualஉல்லாசமாக இருந்தப் பெண் பணம் கேட்டதால் அந்தப் பெண்ணை நகைக்கு ஆசைப்பட்டு கொலை

செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த நத்தாநல்லூர் பூதேரி சாலை வனப்பகுதியில் கடந்த 1ஆம் தேதி ஒரு பெண் கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாகக் கிடந்தார்.

இது குறித்து வாலாஜாபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அந்தப் பெண் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி 37 வயதுடைய ரேணுகா என்பதும், இவர் வீட்டுவேலை செய்து வந்தார் என்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், ரேணுகாவின் கணவர் மூலமாக அவர் பயன்படுத்திய செல்போன் எண்ணை பெற்று மாவட்ட சைபர் கிரைம் உதவியுடன் அந்த செல்போனில் இறுதியாகப் பேசியவர்களின் விவரங்களைச் சேகரித்தனர்.

விசாரணையில் இந்த கொலையை செய்தவர் காஞ்சிபுரத்தை அடுத்த சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சந்திரசேகர் என்பது தெரியவந்தது.

அவரைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில், கீழ்ஒட்டிவாக்கம் என்ற இடத்தில் இருந்த சந்திரசேகரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

ரேணுகாவின் தொலைபேசி எண் எனக்கு கிடைத்தது. 10 நாட்களாக அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி பழகி வந்தேன். அப்போது அவர் ரூ.5 ஆயிரம் பணம் கேட்டார்.

அதை தர நான் ஒப்புக்கொண்டேன். பணத்தை வாங்குவதற்காக ரேணுகா கடந்த 29ஆம் தேதி மாலை வாலாஜாபாத் பஸ் நிலையம் வந்தார்.

அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பூதேரி ஏரிக்குச் செல்லும் பாதைக்கு சென்றேன். அங்கு ரேணுகாவுடன் உல்லாசமாக இருந்தேன்.

ரேணுகா ரூ.5 ஆயிரம் தரும்படி கேட்டார். அதற்கு நான், இன்னும் சம்பளம் வாங்கவில்லை. வாங்கியதும் தருகிறேன் என்று கூறினேன். இதனால் எங்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

ரேணுகா நகைகள் அணிந்திருந்தார். அவரை கொலை செய்து நகையை பறித்துச் சென்று விடலாம் என்று முடிவு செய்தேன். ரேணுகாவின் கழுத்தை சுடிதார் துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தேன்.

பின்னர் அவரது செல்போனை எடுத்துக்கொண்டேன். தங்கச்சங்கிலி, வளையல்கள் போன்றவற்றை கழற்றினேன். காதில் இருந்த கம்மல்களை அறுத்து எடுத்தேன்.

பின்னர் அருகில் இருந்த குட்டை தண்ணீரில் நகைகளை கழுவினேன். பிறகு வாலாஜாபாத் பஜாருக்குச் சென்று அடகு கடையில் நகைகளை அடகு வைத்தேன்.

அப்போது கம்மல் மட்டுமே தங்கம் என்றும், மற்றவை கவரிங் என்றும் கூறி திருப்பி கொடுத்துவிட்டார்கள். கம்மலை மட்டும் அடகு வைத்தேன். இவ்வாறு அவரது வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சந்திரசேகரிடம் இருந்து நகை மற்றும் செல்போன் கைப்பற்றப்பட்டது. அவரை காவல்துறையினர் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்திரசேகர் ஏற்கனவே தாம்பரத்தில் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு 4 மாதம் சிறை தண்டனை பெற்றவர் என்றும், காஞ்சிபுரத்தை அடுத்த பாலூர் பகுதியில் தகராறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply