சீனாவில் குழந்தை பெற்ற ஒரு தாய், தான் பெற்ற குழந்தையை டாய்லெட்டில் போட்டு சென்றதாகவும், டாய்லெட்ட்டில் இருந்து குழந்தை அழுத குரல் கேட்டு டாய்லெட் சுத்தம் செய்யும் நபர் காப்பாற்றி காவல்துறையிடம் ஒப்படைத்த செய்தி ஒன்று சீனாவை மட்டுமின்றி உலகையே திடுக்கிட வைத்துள்ளது.
வடகிழக்கு சீனாவில் உள்ள Shaanxi Province என்ற பகுதியில் உள்ள டாய்லெட் ஒன்றினை சுத்தம் செய்ய சுத்தம் செய்யும் ஊழியர் சென்றுள்ளார். அப்போது டாய்லெட்டின் உள்ளே இருந்து குழந்தையின் அழுகுரல் ஒன்று கேட்டுள்ளது. இந்த அழுகுரலை கேட்டு திடுக்கிட்ட அவர் டாய்லெட் அருகே சென்று பார்த்தபோது, பிறந்து சில நிமிடங்களே ஆன குழந்தை ஒன்று டாய்லெட்டின் உள்ளே குப்புற விழுந்து அழுது கொண்டிருந்தது.
உடனடியாக அந்த குழந்தையை வெளியே எடுத்த அந்த நபர், மருத்துவமனைக்கும் காவல்துறையினர்களுக்கும் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் யாரோ மர்ம பெண் ஒருவர் டாய்லெட்டின் உள்ளே சென்று தானாகவே குழந்தை பெற்று அந்த குழந்தையை வீசியெறிந்துவிட்டு சென்றதாக அறியப்பட்டது. அந்த மர்ம பெண்ணை தேடும் முயற்சியில் சீன போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குழந்தை டாய்லெட்டின் உள்ளே இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
















